Wednesday 28 February 2018

1.3 கோடியில் மருத்துவ உபகரணத் தொகுதி



தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு    வழங்கி வைப்பு
  

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவு மற்றும் அதனோடு இனைந்த பகுதிகளுக்கான  1.3 கோடியில் மருத்துவ உபகரணத் தொகுதிகளினை கையளிக்கும் நிகழ்வு நேற்று முந்தினம் வைத்தியசாலையில் இடம் பெற்றதது

 
வைத்தியசாலையின் மிகவும் தேவைப்பாடாகவும் குறைபாடாகவும் காணப்பட்ட மருத்துவ உபகரண தொகுதிகளின் தேவைப்பாட்டினை உணர்ந்து எஸ்.கே.நாதன் நற்பணி மன்றப் பணிப்பாளரினால் இவ் மிகப் பிரமாண்டமான மருத்துவ உதவிகள் வழங்கி வைப்பக்கட்டுள்ளது
ரூபா ஒரு கோடியே முப்பது இலட்சம் பெறுமதியான மருத்துவ உபகரண தொகுதிகள் தளபாடங்கள் மற்றும் இலத்திரனியல் உபகரணங்கள் என்பதனை கோவளம் காரைநகரை சேர்ந்த சமுக சேவையாளரும் எஸ்.கே.நாதன் நற்பணிமன்றப் பணிப்பாளருமான பரோபகாரி திரு. சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவர்களால் வழங்கிவைப்பக்கட்டுள்ளது.

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி யோ.திவாகர் தலைமையில் நடைபெற்ற இவ் நிகழ்வில் பிரதம அதிதியாக வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி எஸ்.குனசீலன் அவர்களிடம் இப் பிரமாண்ட ரூபா 1.03 கோடி பெறுமதியான வைத்திய உபகரண தொகுதிகளை சுப்பிரமணியம் கதிர்காமநாதன் உத்தியோக பூர்வமாக கையளித்தார்.

தமிழர் பண்பாட்டின் உயிர் மூச்சான நன்றி மறப்பது நன்றல்ல என்பதற்கு அமைவாக இப் பெரும் தொகையினை தனி மனிதராக முன்வந்து மனமுவர்ந்து நல்கிய நல் உள்ளத்தினை பொன்னாடை போர்த்தி மாலை அனிவித்து பாராட்டி கெளரவிப்பும் வைத்திய கலாநிதி யோ.திவாகரினால் இடம் பெற்றது.

மேலும் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புற்று நோயாளர்களுக்கான அதிசக்தி நவீன உயர் சக்தி கதிரியக்க பொறிமுறை அனுகுமுறைக்கான அடிப்படை கட்டிட நிர்மானமும் இதற்கு சிகிச்சை வழங்கும் பல கோடி பெறுமதியான LIMEAR ACCELARATORம் வழங்கப்பட்டுள்ளது என்பதுடன் உவரினால் வழங்கிவைக்கப்பட்ட உபகரணங்கள் பெறுமதியான உயிர்காப்பு மருத்துவ சிகிச்சைக்கு பெருதவியாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

COIVD-19 தொற்று , கதிரைகள் வழங்கிவைப்பு

வருத்தப்படாத வாலிபர் சங்கத்தால்  COIVD-19 தொற்று கதிரைகள் வழங்கிவைப்பு! தெல்லிப்பழை ஆதாரவைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக்கு 25 ...