Wednesday, 4 July 2018

கொடி அரைக்கம்பத்தில் குருதிக் கொடை




யாழ்ப்பாணம் அல்வாய் வேவிலந்தை முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 1987ம் ஆண்டு  படுகொலை செய்யப்படட உறவுகளை நினைவுகூர்ந்து நேற்று (29)  அவர்களின் ஆத்ம சாந்தி வேண்டி குருதிக் கொடைமுகாம்  அல்வாய் மனோகரா சனசமூக நிலையத்தில் இடம் பெற்றது 






மனோகரா சனசமூக நிலையத்தின் கொடி அரைக்கம்பத்தில் பறக்க துக்கத்தினமாக கடைப்பிடிக்கப்பட்டு அப்பிரதேச இளையர்களால் ஒழுங்கு செய்யப்பட்டு இடம் பெற்ற நிகழ்வில் 
யாழ், தெல்லிப்பளை ஆதார  வைத்தியசாலை குருதி வாங்கி பொறுப்பதிகாரி
 வைத்தியர் ம.பிரதீபன்   கருத்து தெரிவிக்கையில் 


உண்மையில் தானங்களில்  சிறந்த தானம் குருதிதானமேயாகும் வளர்ந்து வரும்  இளம் தலைமுறையினருக்கு வழிகாட்டியாக விளங்கும்  இச்  செயற்பாடு ஒரு முன் உதாரணமாகும் ,  உலகில் இதுவரை குருதிக்கு இணையான எந்த ஒரு திரவமும் இதுவரை 

கண்டு பிடிக்கப்படவில்லை எனவே குருதிக்கு இணையானது குருதி மட்டுமே ,எனவேஇவ்வாறு உயிர் நீத்தவர்களின் நினைவாக செய்யப்படும் இவ்வாறான குருதிக் கொடை முகாமினை தான் வரவேற்பதுடன் இவ்வாறான குருதிக் கோடை முகாமினை வளர்ந்து வரும் இளம் தலைமுறையினர்எதிர்காலத்தில் ஏற்படுத்தி செயற்படுத்த வேண்டும் என தெரிவித்தமை  குறிப்பிடத்தக்கது 

No comments:

Post a Comment

COIVD-19 தொற்று , கதிரைகள் வழங்கிவைப்பு

வருத்தப்படாத வாலிபர் சங்கத்தால்  COIVD-19 தொற்று கதிரைகள் வழங்கிவைப்பு! தெல்லிப்பழை ஆதாரவைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக்கு 25 ...