Wednesday, 4 July 2018

தாதிய உத்தியோகத்தர்கள் குருதிக் கொடை




யாழ்ப்பாணம் தெல்லிப்பளை ஆதாரவைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர்களினால் உலக தாதிய தினத்தினை முன்னிட்டு நேற்று முன்தினம்(19) குருதிக் கொடை நிகழ்வு இடம் பெற்றது 






இந்த நிகழ்வில் தன்னலம் கருதாத தாதிய உத்தியோகத்தர்கள் ,உடன் வைத்தியசாலை ஊழியர்களும் இணைந்து கொண்டு குருதி தானம் செய்தமை விசேட அம்சமாகும் 

வளர்ந்து வரு ம்  இளம் தலைமுறையினருக்கு வழிகாட்டியாக விளங்கும் தாதியர்களின் இச்  செயற்பாடு ஒரு முன் உதாரணமாகும் என குருதி வங்கி பொறுப்பதிகாரி எம்.பிரதீபன் கருத்து தெரிவித்தார்

மேலும் அவர் கூறுகையில் தாதியர்கள் மற்றவர்களுக்கு உதாரணமாக செயற்படுபவர்கள் வைத்தியசாலையில் வரும் நோயாளர்கள் வைத்தியரிடம் செலவு செய்யும் நேரத்தினை விடவும் தாதிய உத்தியோகத்தர்களிடமே அதிகளவான நேரத்தினை செலவிடுகின்றனர் 

நோயாளர்களை கண்ணும் கருத்துமாக பக்குவமாக பார்த்து அவர்களின் தேவைகளை உண்ர்ந்து  ஒவ்வொரு நோயாளியினதும்  மனப் பக்குவத்தினை உணர்ந்து இவர்கள் ஆற்றிவரும் தன்னலம் கருதாத இச் சேவை  மிகவும் போற்றத்தக்கது 


உலகில் இதுவரை குருதிக்கு இணையான எந்த ஒரு திரவமும் இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை எனவே குருதிக்கு இணையானது குருதி மட்டுமே ,எனவே இவ்வாறான குருதிக் கோடை முகாமினை வளர்ந்து வரும் இளம் தலைமுறையினர் ஏற்படுத்தி செயற்படுத்த வேண்டும் , இதற்கு இந்த குருதி கோடை முகாமும் ஒரு முன் உதாரணமாகும் என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment

COIVD-19 தொற்று , கதிரைகள் வழங்கிவைப்பு

வருத்தப்படாத வாலிபர் சங்கத்தால்  COIVD-19 தொற்று கதிரைகள் வழங்கிவைப்பு! தெல்லிப்பழை ஆதாரவைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக்கு 25 ...