10 இலட்சம் பெறுமதியான அல்ராசவுண்ட் ஸ்கானர் வழங்கப்பட்டது.
தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் மகப்பேற்று, பெண் நோயியல் வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி ந.சரவணபவா அவர்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப அவுஸ்ரெலியாவை சேர்ந்த றொட்டேறியன் ஹரன் ராமச்சந்திரன் அவர்களின் ஏற்பாட்டில் றொட்டேறியன் சூ ஓ நீல் அவர்களின் நிதி உதவியுடன் றொட்டறி அவுஸ்ரெலியா உலக சமூக அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் ரூபா 10 இலட்சம் பெறுமதியான மொபைல் அல்ராசவுண்ட் ஸ்கானிங் கருவி தீவுப் பகுதியில் கற்பவதிகளுக்கான நடமாடும் சேவைகளை மேற்கொள்வதற்காக நல்லூர் றோட்டறிக் கழகத்தினால் கடந்த 08 அன்று தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் மருத்துவ அத்தியட்சகர் வைத்திய கலாநிதி யோ.திவாகர் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் நல்லூர் றோட்டறி கழகத்தின் தலைவர் றொட்டேறியன் றோய் சத்தியசுதாகர், முன்னாள் ஆளுனர் றொட்டேறியன் ஆ.சம்பத்குமார்(திருவண்ணாமலை, இந்தியா), முன்னாள் ஆளுனர் றொட்டேறியன் புஸ்பலிங்கம்(பேர்த், அவுஸ்ரெலியா), முன்னாள் தலைவர் றொட்டேறியன் தனசேகர்(சென்னை, இந்தியா) , முன்னாள் தலைவர் றொட்டேறியன் ரவிராமன்( சென்னை, இந்தியா), முன்னாள் தலைவர் றொட்டேறியன் சுகந்தன்( நல்லூர்) ,நல்லூர் றோட்டறி கழகத்தின் தெரிவுத் தலைவர் றொட்டேறியன் மருத்துவர் m.பிரதீபன் மற்றும் வைத்தியசாலை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment