Saturday, 27 June 2020

குழந்தைகளுக்கான தடுப்பு ஊசி சிகிச்சை நிலையம்

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் குழந்தைகளுக்கான தடுப்பு ஊசி சிகிச்சை நிலையம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.


வைத்தியசாலையில் பணிப்பாளர் ஆர்.டி.ஜு விமலசேன தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்களான ஆறுமுகம் கேதீஸ்வரன், எஸ்.குமாரவேல் ஆகியோர் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு தடுப்பு ஊசிய நிலையத்தினை ஆரம்பித்து வைத்தனர்.

இந்த நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது. குழந்தை வைத்திய நிபுணர் சிவலிங்கம் ஜெயபாலன் மற்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோர் இணைந்து குழந்தைகளுக்கான தடுப்பு ஊசிகளை ஏற்றி ஆரம்பித்து வைத்தனர்.
இது வரை காலமும் குழந்தைகளுக்கான தடுப்பு நிலையம் சுகாதார வைத்திய அதிகாரி பணிமணையில் இயங்கி வந்த நிலையில் குழந்தைகளுக்னான தடுப்பு ஏற்றுவதற்கான நிலையம் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் ஆரம்பித்து வைக்கப்பட்டமை சிறப்பம்சம். புhரிய இருதய பிரச்சிணை, குறை மாதத்தில் பிறந்த குழந்தைகள், பிரதேசங்களில் உள்ள சுகாதார வைத்தியச அதிகாரி பணிமiயில் போடமுடியா தடுப்பு ஊசிகளை இங்கு போட்டுக்கொள்ள முடியும்.
இந்த நிலையத்தில் பிறந்த குழந்தை முதல் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கான தடுப்பு ஊசியினை இங்கு ஏற்றி கொள்ள முடியும் என குழந்தை வைத்திய நிபுணர் சிவலிங்கம் ஜெயபாலன் தெரிவித்தார். இந்த நிகழ்வில பிராந்திய தொற்று நோயிளாளர் பரமாணந்தம் பரணீதரன், தாதியர்கள், குடும்பநலமாதுக்கள், வைத்தியசாலை ஊழியர்கள், மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.







No comments:

Post a Comment

COIVD-19 தொற்று , கதிரைகள் வழங்கிவைப்பு

வருத்தப்படாத வாலிபர் சங்கத்தால்  COIVD-19 தொற்று கதிரைகள் வழங்கிவைப்பு! தெல்லிப்பழை ஆதாரவைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக்கு 25 ...